ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம் என பலர் நடித்து வெற்றியடைந்த ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ. தற்போது தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், நடிகை பிரியா சினிமாவில் சிங்கம், நான் மஹான் அல்ல, சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்தார்.

இந்நிலையில் நடிகை பிரியாவின் தாத்தா காலமாகியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அட்லீ ‘பிரியாவின் தாத்தா இன்று காலமாகிவிட்டார். அவரை தாத்தா என்று அழைப்பது அவருக்கு பிடிக்காது எனவே எப்போதும் அவரை ப்ரோ என்றுதான் கூப்பிடுவேன். அவருக்கு 82 வயதாகிறது.

கடந்த வாரம் கூட நாங்கள் நன்றாக பேசினோம் அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என்னுடைய நல விரும்பியாக நண்பனாக என்னை வழிநடத்தினார் அவர் என்னிடம் சகஜமாக என்னை ’மின்னலே’ படத்தில் நாகேஷ் நடித்த சுபினி தாத்தா போலவே இருப்பார். நீங்கள் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கள் குடும்பம் ஒரு தூணையும் ஒரு நண்பனை இழந்து உள்ளது. உங்களுடைய இடத்தை எங்கள் வாழ்வில் யாராலும் நிரப்ப முடியாது’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
@priyaatlee Thatha passed away today He doesn’t like to be called Thatha so I always call him bro.He is 82, even last week we both had a beautiful conversation.. he loved me so much he has always been a well wisher, friend and experienced guide (minalae Subini Thatha type) miss u pic.twitter.com/TamLpHfCDC
— atlee (@Atlee_dir) September 12, 2020