இவ்வளவு பணம் செலுத்தினால் தான் விஜய் சேதுபதியின் படத்தை பார்க்க முடியுமாம்..! வெளியான தகவல்

மக்கள் செல்வன் என்று தமிழ் ரசிகர்களால் புகழப்பட்டவர் விஜய் சேதுபதி. இவரின் எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னணி கதாநாயகனாக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறு வேடங்களில் நடித்தவர். மேலும் லாக்டவுன் முடிந்தவுடன் இவரின் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது. மேலும் தளபதி விஜய்யுடன் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விருமாண்டி என்பவறின் இயக்கத்தில் மீண்டும் இந்த திரை ஜோடி இணைந்து கணவர் பெயர் ரணசிங்கம் எனும் படத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. புதிய திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியாகி வருகிறது. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம், அதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க.பெ.ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் அக்டோபர் 2 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்படத்தை ஜீ பிளக்ஸ் முறைப்படி தொலைக்காட்சி வாயிலாக ரூ.199 செலுத்தினால் வீட்டிலேயே காணலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் இதில் ஒரு காட்சிக்கு இவ்வளவு செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.