தொலைக்காட்சி தொடர்கள் தான் வீட்டில் உள்ள பெண்களுக்கு பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்களை கவரும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்படுகிறது. அன்று முதல் இன்று வரை தொலைக்காட்சியில் நடிக்கும் பல பேர் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு அவர்களின் நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். சினிமாவில் எந்த அளவிற்கு முக்கிய துவம் வாய்ந்ததோ. அதே அளவிற்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும்
கொடுக்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சீரியல் பார்க்கும் வழக்கம்

உள்ளவர்களுக்கு சின்னத்திரை ஷில்பாவை தெரியாமல் இருக்க முடியாது. இவர் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையுலகில் உள்ளார். தொடர்கள் பாக்கும் அனைவருக்கும் இவரின் முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவர் மக்களிடத்தில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.‘மெல்ல திறந்தது கதவு’, ‘தாமரை, உள்பட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியபோது, ‘எங்கப்பாவை போல ஒரு நேர்மையாளரை இதுவரை நானும் என்னுடைய அக்காவும் பார்க்கவில்லை.
