“காதல் சடுகுடு” படங்களில் நடித்த நடிகை இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!

நடிகை பிரியங்கா திவிவேதி, தமிழ் சினிமாவில் ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் ஆகிய படங்களில் நடித்தவர். பிறகு கன்னட நடிகர் ஒருவரை 2003-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் 15 வருடங்களுக்கு பின், மீண்டும் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இவர். இவர் கடைசியாக அருண் விஜய் நடித்த “ஜனனம்” படத்தில் கடந்த 2014 ஆண்டு நடித்தார்.

இதை தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் பிரபலங்களான மகத், யாஷிகா ஆனந்த் இணைந்து நடித்து வரும் த்ரில் படத்தில் பிரியங்கா திரிவேதி முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிப்பது குறித்து பிரியங்கா கூறியபோது, “என்னுடைய கேரக்டரின் முக்கியத்தும் என்னை கவர்ந்ததால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டேன்” என கூறியுள்ளார்.

அதே போல், தமிழ்ப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தமிழில் தற்போது கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் அதிகம் வந்து கொண்டிருப்பதாகவும் இவர் தெரிவித்தார். இந்த படம் தமிழில் மட்டுமின்றி கன்னடத்திலும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிவ் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன. இதோ அவருடைய புகைப்படங்கள் சில…