மாடுகளை வீட்டின் பின்வாசலில் கட்டி வைக்கும் விவசாயிகள் பலரையும் பார்த்திருப்போம். ‘’ஆடு, மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேசன்கார்டில் பேரை சேர்க்க கேட்கும்” என சிவாஜி திரைப்படத்தின் பல்லேலக்கா பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடும் பாடலைப் போலவே மாடுகளின் மீது அதீத அன்பை செலுத்துவோரும் உண்டு. பதிலுக்கு அந்த மாடுகளும் அவர்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும்.
பொதுவாகவே வீட்டில் பசு மாடு இருப்பது அதிர்ஷ்டம் என சொல்வார்கள். பசு மாடு மிகவும் பாசமாக பழகக் கூடியதும்கூட. மனிதர்களோடு நெருக்கமாக இருக்கும் பிராணிகளில் முதன்மையானது மாடு. மாடுகள் தங்கள் எஜமானார்களோடு மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும் பழகக் கூடியது. அந்தவகையில் இதோ இங்கே சில ஒரு குழந்தைக்கு கட்டுப்படும் ஜல்லிக்கட்டு காளை பாருங்க. அசந்துபோவீங்க..