தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வ லிமை திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகும் என எதிர்பார்த்த வந்த ரசிகர்களுக்கு ஏ மாற்றம் அளிக்கும் வகையில் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தல அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்…
