பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஆலியா. அதே சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆலியா சிறுது காலம் சினிமாவில் நடிக்காமல் இடைவெளி விட்டிருந்தார். திருமணத்துக்கு பிறகு சஞ்சீவ் கார்த்திக் ‘காற்றின் மொழி’ சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

நடிகை ஆலியா மானசா குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். மிக விரைவாக உடல் எடையை குறைத்து ஒல்லியாக ஆகிவிட்டார். ஆல்யா மானசா நடிப்பில் ராஜா ராணி 2 சீரியல் உருவாக இருக்கிறது. அதற்கான புதிய புரொமோ அண்மையில் வெளியானது. நாயகன் சமையல்காரன், படிக்காதவன், நாயகி போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவில் இருப்பவள்.

இந்நிலையில், டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார். குறித்த காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அடிக்கடி தனது ஸ்லிம் லுக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார். அவர் வெளியிட்ட அனைத்து வீடியோக்களையும் பார்த்து ரசிகர்கள் கிரங்கி போயுள்ளனர்.
View this post on Instagram