சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தான். கடந்த அக்டோபர் 4 தேதி உலக நாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் பிரமாண்டமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மிக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரியோ ராஜ், அறந்தாங்கி நிஷா, ரேகா, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் சேகர் என 16 பிரபலங்கள் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பல தெரிந்த பிரபலங்களும் சில தெரியாத பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 4 நாட்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. நிகழ்ச்சி ஆரம்பித்த முத்தம் நாள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருந்தது. ஆனால் அடுத்த நாளில் இருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டன. அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் நடந்த சண்டைகள் தான் 3 நாட்களாக காண்பிக்கப்பட்டன.

தற்போது இன்று ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் ரேகா மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் சண்டை வந்துள்ளது. வீட்டில் தலைமை பொறுப்பை இந்த வாரம் ஏற்றிருக்கும் ரம்யா பாண்டியன் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார். என்ன இது எப்போதும் நிகழ்ச்சியில் சண்டையாக இருக்கிறது என ரசிகர்கள் வெறுப்பில் உள்ளார்கள்.
#Day5 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/VHVpfGC07d
— Vijay Television (@vijaytelevision) October 9, 2020