சரவணன் மீனாட்சி என்னும் தொடர் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான ஒரு காதல் தொடர். சரவணன், மீனாட்சி என்னும் இளையோரின் காதல் கதையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இது வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) எட்டரை மணியிலிருந்து ஒன்பது மணிவரை ஒளிபரப்பானது. இந்த பெயரிலான காதல் தொடர்கள் இரண்டு பகுதிகள் முடிந்து மூன்றாம் பகுதி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் மக்களிடம் பிரபலமாக ஓடியது. அதே பெயரில் பல கதைகள் வந்தாலும் முதலில் வந்த ஜோடிக்கு தான் ரசிகர்கள் அதிகம். செந்தில்-ஸ்ரீஜா இருவரும் நிஜத்தில் இணைய வேண்டும் என மக்கள் ஆசைப்பட அப்படியே நடந்தும் முடிந்தது. இருவரும் திருமணத்திற்கு பிறகும் ஒன்றாக இணைந்து சீரியல்கள் நடித்தார்கள்.

ஆனால் சில வருடங்களாக ஸ்ரீஜாவை சீரியல் பக்கமே காணவில்லை, அவரது கணவர் செந்தில் மட்டும் சீரியல்கள் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது கல்யாணம் கண்டீஷன்ஸ் அப்ளை என்ற தொடரில் இருவரும் நடித்தது நமக்கு தெரியும். அதன் புதிய பாகம் இப்போது தயாராகி வருகிறதாம். படப்பிடிப்பு இருவரும் எடுத்த வீடியோ ஒன்றை செந்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram