இது என்ன மாயம் எனும் படத்தின் மூலமாக நம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன் பின்னர் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீம ராஜ, சர்கார் போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்கள் மத்தியில் விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். மேலும் நடிகையர் திலகம் எனும் ஒரே படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய தேசிய விருது, இவருக்கு தென்னிந்திய திரையுலகில் ஓர், சிறந்த நடிகை எனும் பெயரை பெற்று தந்தது. சமீபத்தில் கார்த்திக் சுப்ராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் சோலோ ஹீரோயினாக நடித்திருந்த பென்குயின் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தன் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி அவர்களுடன் தான் சிறு வயதில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…
Happy Birthday to the legendary and handsome @mammukka uncle❣️
You’ve been a constant source of inspiration ??
May you keep growing younger by the day as you always do and have a blessed year ahead! ? #HappyBirthdayMammootty pic.twitter.com/Vjjzrk40Pw
— Keerthy Suresh (@KeerthyOfficial) September 7, 2020