இன்று வெள்ளித்திரையை விட சின்னத்திரை வேறு ஒரு பரிமானத்திர்க்கே சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். திரைப்படங்களை விட சின்னத்திரை நிகழ்சிகள் நாளுக்கு நாள் மக்களிடையேவும் ரசிகர்களிடையேவும் பிரபலமடைந்து வருகிறது, இப்படி லாக்டவுன் காரணமாக பல மாதங்களாக பொதுமக்களும் திரைப்பிரபலங்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த நிலையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சினதிரை தொடர்கள் ரசிகர்களுக்கு ஆதரவு அளித்தது என்றே சொல்லவேண்டும். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை செல்ல எவ்வளவோ நடிகர் நடிகைகள் முயச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர், இவர் தற்போது டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர், இப்படத்தின் வெளியிட்டிற்காக அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சிவகார்த்திகேயனுடன் குக் வித் கோ மாளி தீபாவும் உள்ளார்.

இதேபோல் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படமான டான் படத்தில் குக் வித் கோ மாளி பிரபலம் ஷிவாங்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
