செந்தூரப்பூவே சீரியல் நடிகையின் அம்மாவா இது – அச்சு அசல் அப்படியே அவரை போலவே இருக்கிறாரே : புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக நடிகர்கள் நடிககைகள் வலம் வந்த உள்ளனர். இதற்கு காரணம் அவர்களது திறமை என்றாலும் அதை வெளிபடுத்த அவர்களுக்கு உதவியாக இருந்தது என்னமோ சோசியல் மீடியாவில் வெளிவந்த சில செயலிகள் தான். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் டிக்டாக் செயலியை தான் சொல்ல வேண்டும்.

இந்த செயலியின் மூலம் தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடிக்க வாய்ப்பு பெற்றவர்கள் பலர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று நடிகர் ரஞ்சித் நடித்து வரும் செந்தூரப்பூவே.

இதில் கதாநாயகியாக அறிமுகமாகி இருப்பவர் இளம் நடிகை ஸ்ரீ நிதி. இவர் இதற்கு முன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த தறி எனும் சீரியலில் நடித்துள்ளார்.

செந்தூரப்பூவே சீரியலில் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் வாராவாரம் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.

இந்நிலையில் இந்த முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் தனது தாயுடன் ஒரு எபிசோடில் கலந்துகொண்டுள்ளார் ஸ்ரீ நிதி.