செம மாஸ்…. நயாகரா நீர்வீழ்ச்சியில் சூப்பர் சிங்கர் ஸ்டார்ஸ்…. குரூப் சாங் பாடிய கியூட் வீடியோ….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இதில் இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் பலரும் இன்று பிரபலங்களாக வளர்ந்து நிற்கின்றனர். பலருக்கும் நல்ல வாய்ப்புகள் அமைந்து வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.

சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் எட்டாவது சீசன் முடிவடைந்தது. பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பலரும் உலக அளவில் பிரபலம் தான்.அவர்கள் அனைவரும் அடிக்கடி உலக சுற்றுலா சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி கனடாவில் நடைபெறும் ஒரு கான்சர்ட்காக சூப்பர் சிங்கர் பரத், புன்யா, அய்யனார், சிவாங்கி, பிரியங்கா மற்றும் கார்த்திக் தேவராஜ் உள்ளிட்ட பலரும் சென்று உள்ளனர். அங்கு இவர்கள் அனைவரும் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்று இருந்தனர்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Priyanka NK இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@priyankank)

அப்போது நீர்வீழ்ச்சி அருகே அனைவரும் ஒன்றாக இணைந்து நின்று கொண்டு “சில் அல்லவா சில் அல்லவா”என்ற நயாகரா பாடலை அவ்வளவு அருமையாக பாடியுள்ளனர்.அதனை ஒரு ரீல் எடுத்து சமூக வலைத்தளங்களில் தற்போது பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் லைட்ஸ்களை குவித்து இதயத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.