தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு அவர் தமிழில் 2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றியை தேடித்தரவில்லை. பின்பு அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடித்தார்.

இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தன பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். விஜய், விக்ரம் விஷால் சிவா கார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்த நடிகையர் திலகம் இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. சமிபத்தில் அவர் பென்குயின் படத்தில் நடித்து வெற்றிபெற்றது. இந்நிலையில் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அவருக்கு பிடித்த கோயிலுக்கு சென்றுள்ளார்.அங்கே துளியும் மேக்கப் போடாமல் தான் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதோ அந்த புகைப்படம்..
???????????? #TempleVisit #AlamelumangapuramTemple #PrePongalVisit pic.twitter.com/FyodF8bgO3
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 10, 2021