தமிழ் சினிமாவில் 90கலீல் நடித்த பல நடிகர்களும் சாக்லேட்பாயாக வலம் வந்தவர்கள் தான், இதில் முக்காவாசி நடிகர்கள் இன்று அடையாளம் தெரியாமல் கானம் போய்விட்டனர். அப்பொழுது பத்து ஹீரோக்கள் இருந்தால் அவர்களில் ஒன்பது பேர் சாக்லேட்பாயாக தான் இருப்பார்கள். இப்படி தனது முதல் படத்திலேயே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் மாதவன்.

இவர் முதன் முதலில் அலை பாயுதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மணிரத்னம் இயக்க இந்த படத்தில் தல அஜித்தின் மனைவிமான ஷாலினி நடித்திருந்தார். இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய வெற்றியடைய தொடங்கியன.நடிகர் மாதவன் அப்போது பெண்களின் கனவு கண்ணனாக காணப்பட்டார்.

அப்பொழுதெல்லாம் எந்த பெண்ணை கேட்டாலும் தனக்கு மாதவன் போலதான் கணவன் வேண்டும் என கூறுவார்கள் அந்த அளவிற்கு பெண்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருந்தார். நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கியவர், இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் மாதவன், தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக மகளிர் மட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார், அதுமட்டுமின்றி அண்மையில் இவர் நடித்த மாறா திரைப்படம் பிரபல OTT தளத்தில் வெளியானது.

இந்நிலையில் தற்போது நடிகர் மாதவன் அவரின் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவரின் அம்மா, அப்பா, மனைவி, மகன் என அனைவரும் உள்ளனர்.இதோ அந்த புகைப்படம்..
