“நான் மறுபிறவி எடுக்க போறேன்”…. 100 முறை அருந்ததி படத்தை பார்த்து…. கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு…. கொடூர சம்பவம்….!!!!

அருந்ததி திரைப்படத்தை பார்த்து மறுபிறவி எடுக்கலாம் என்ற எண்ணத்தில் கல்லூரி மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார்.

அவரின் திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் அருந்ததி. இந்தத் திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. இந்த படம் வெளியாகி மிகப் பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்தது. அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த திரைப்படம் இது.

இந்நிலையில் அருந்ததி படத்தில் அனுஷ்கா மறுபிறவி எடுப்பது போல நானும் மறுபிறவி எடுக்கப் போவதாக எண்ணி கல்லூரி மாணவன் ஒருவன் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்த வந்த ரேணுகா பிரசாந்த் என்ற மாணவன் திரைப்படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளான்.

அவ்வாறு பார்க்கும் திரைப்படங்களில் இருக்கும் கதாபாத்திரங்களை போல தன்னையும் நினைத்துக் கொண்டு செயல்படுவான். அவ்வகையில் அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படத்தை கிட்டத்தட்ட 100 முறைக்கும் மேல் அந்த மாணவன் பார்த்துள்ளான். அப்படத்தில் அனுஷ்கா மறுபிறவி எடுப்பதற்காக தலையில் தேங்காய் அடிக்கச் சொல்லி உயிரிழந்து விடுவார். அதன் பிறகு மறுபிறவி எடுப்பார்.

இதனைப் பார்த்த அந்த கல்லூரி மாணவன் தானும் உயிரிழந்து மறுபிறவி எடுக்க வேண்டும் என்று நினைத்து உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து கொண்டான். அதனைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனே மாணவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இறப்பதற்கு முன்பு மாணவன் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகிறது.

 

அதில்,தந்தையிடம் முக்தி கொடுங்கள் முக்தி கொடுங்கள் நான் மறுபிறவி எடுப்பதற்கு முக்தி கொடுங்கள் என்று கெஞ்சுகின்றான். அதனை பார்த்து தந்தையும் கண்ணீர் விட்டு அழ,நான் உன்னை அருந்ததி படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்லியும் என் பேச்சை நீ கேட்காமல் படம் பார்த்ததற்கு நான் எப்படி உனக்கு முக்தி கொடுக்க முடியும் என்று கதறி அழுதார். அப்படி தந்தையும் மகனும் மாறி மாறி பேசிக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.