நிவர் புயலால் கடற்கரையில் அடித்து ஒதுங்கிய தங்க மணிகள்…! அள்ளிச் சென்று ஓடிய கிராமமக்கள்..! – ஆச்சரிய தகவல்..

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நிவர் புயல் காரணமாக கரை ஒதுங்கிய தங்க மணிகளை பொதுமக்கள் அள்ளிச்சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கன மழை கடந்த சில தினங்களாக பெய்தது.

இந்த கன மழை காரணமாக, பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன.

அவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிவர் ஆந்திரா மக்கள் சிலருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கடலோரப் பகுதியிலுள்ள சிறிய கிராமமான உப்படாவில் கடந்த வெள்ளிக்கிழமை காலை கடற்கரை பகுதியில் தங்கம் போல ஏதோ மின்னுவதை மீனவர் ஒருவர் பார்த்துள்ளார்.

இதையடுத்து அவர் உடனடியாக ஊர் மக்களிடம் கூற, அனைவரும் கடற்கரைக்கு வேகமாக ஓடி வந்துள்ளனர். அப்போது அங்கு சிறிய சிறிய உருண்டைகள் போன்ற மணிகளாக தங்கம் கிடைக்க, அங்கு ஏராளமான மக்கள் கூடியுள்ளனர்.