நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதியா இது..?? பார்க்கவே பரிதாபமாக உள்ளார்..!! அவரின் தற்போதய நிலையை நீங்களே பாருங்கள்..!

தொலைக்காட்சி தொடர்களை தாண்டி அதில் பிரபலமான ஒரு சிலர் உள்ளனர். அதில் சில பெயர்கள் தான் நம் மனதில் நிற்கும் என்பதில் ஆச்சர்யமில்லை.. சின்னதிரையை பொருத்தவரையில் நடிகைகள், நடிகர்கள் மட்டுமின்றி ஒரு காலத்தில் தொகுப்பாளர்களும் பிரபலமாக இருந்தார்கள். அதில் ஒருவர் தான் விஜய் சாரதி.நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி  என்று சொன்னால் தான் எல்லாருக்கும் தெரியும். இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான மர்ம தேசம் சீரியலில் நடித்தார்.

இவர் முதன்முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிதான் நீங்கள் கேட்ட பாடல். இந்த நிகழ்ச்சியில் அவர் பல ஊராக சென்று அங்குள்ள சிறப்புகளை  பற்றி பேசுவதோடு, பின்னால் சென்று கொண்டே பேசுவார். இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் செய்தனர்.

பின் நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்து பவளகொடி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு சித்தி, கோலங்கள், விக்கரமாதித்யன் சீரியல்களில் நடித்துவந்தார். மேலும் பல நேர்க்காணல் நிகழ்ச்சிகள் செய்துள்ளார். இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில்  சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். தொலைக்காட்சிகளில் நன்றாக நம் மனதில் பதிந்த பிரபலங்களில் ஐவரும் ஒருவர் தானே.