பிக் பாஸ் ஜூலியின் புதிய கெட்டப்பால் மிரண்டு போன ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தவர் ஜூலி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாவிற்கும் இடையில் பல சர்ச்சைகள் நடந்தன, இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன்பின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜூலி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீப காலமாக போட்டோ ஷூட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி ரசிகர்கள் ஈர்த்து வரும் ஜூலி திருமணம் கோலத்தில் மற்றும் மார்டன் உடையில் பல புகைப்படங்களை வெளியிட்டார். பிக் பாஸ் புகழ் ஜூலி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இந்த லாக்டவுனில் மற்ற நடிகைகளை போல ஜூலியும் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அதிலும் சமீபத்தில் மாடர்ன் உடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட்டை உடையில் பலரும் வாயடைத்து போனார்கள். இந்த நிலையில் நடிகை ஜூலி காட்டுவாசி கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த மிரட்டலான புதிய புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.