பிரபல தொகுப்பாளர் “நீயா நானா கோபிநாத்திற்கு” கிடைத்த ஜாக் பாட்..! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..! வெளியான தகவல் இதோ..!

தொகுப்பாளர் கோபிநாத் “நீயா நானா” என்ற நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலமானார். இதற்கு பிறகு சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதன் முதலில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதைத் தொடர்ந்து தோனி, நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். தற்போது முதன் முறையாக ஹீரோவாக நடிக்க உள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

பிரபல தொகுப்பாளர் கோபிநாத் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கோபிநாத் நடிக்கவுள்ள படத்திற்கு “இது எல்லாத்துக்கும் மேல” என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளை மையமாக கொண்ட இந்த படத்தை பாரதி கணேஷ் என்பவர் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொகுப்பாளராக களமிறங்கிய கோபிநாத் தற்போது ஹீரோவாக நடிக்கவிருப்பது அவரின் விட முயற்சியை தான் வெளிக்காட்டுகிறது என்று சொல்ல வேண்டும். இந்த விஷயம் அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று தான் கூற வேண்டும்.