மகிழ்ச்சியில் தல அஜித் குடும்பம்.. அரங்கேறிய சுப நிகழ்ச்சி! வைரலாகும் புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். தமிழ் திரையுலகில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படம் நடிகர் தல அஜித். அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். தல அஜித்தின் படம் வந்தாலே தியேட்டரே திருவிழா கோலமாகும். இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தது.

போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. அதே போல் நேர்கொண்ட பார்வையின் வெற்றிக்கு பிறகு மீண்டும் வெற்றி இயக்குனரான எச். வினோத்திடம் கைகோர்த்துள்ளார் அஜித். கொரோனா காரணமாக நின்றுபோன வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. அதற்கான புகைப்படம் கூட வெளிவந்திருந்தது. தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ஷாலினியின் அண்ணன் தான் நடிகர் ரிச்சர்ட். இவர் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் இவரின் திருமண நாளில் தல அஜித்துடன் மொத்த குடும்பமும் எடுக்கத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிவந்த மிகவும் வைரலாகி வருகிறது.