பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான “நாதஸ்வரம்” என்ற தொடரில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை ஸ்ரித்திகா அவர்கள். அதே தொலைக்காட்சியில் கல்யாண பரிசு, குலதெய்வம் உள்ளிட்ட தொடர்களிலும் கதாநாயகியாக நடித்து சின்னத்திரையில் மிகவும் பிரபலமானார். சின்னத்திரை மட்டுமில்லாமல் திரைப்படத்தில் கூட இவர் நடித்துள்ளார் எனபது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த “வேங்கை” படத்தில் தனுஷின் தங்கையாக நடிகை ஸ்ரித்திகா நடித்திருந்தார்.

இந்நிலையில் “வேங்கை” படத்தில் இவர் நடித்திருந்தாலும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் தான் இவருக்கு நல்ல பேர் கிடைத்தது. இந்த இரு படங்களுக்கு பின் “மதுரை டூ தேனி” எனும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அதன்பின் நடிகை ஸ்ரித்திகாவிற்க்கு திரைப்படங்களில் பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்ரித்திகா, சனீஷ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ஸ்லீவ் லெஸ் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

