தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய “உத்தமபுத்திரன்” என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை சுரேகா வாணி. இதனை தொடர்ந்து, அவர் தெய்வத்திருமகன் திரைப்படத்தில் நடிகர் எஸ் எம் பாஸ்கர் மனைவியாக நடித்திருப்பார். தொடர்ந்து, காதலில் சொதப்புவது எப்படி, பிரம்மா, ஜில்லா, எதிர்நீச்சல், விசுவாசம், மெர்சல் என்று பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். நடிகை சுரேகா வாணி தமிழை விட தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கிறார்.

அத்துடன் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நிறைய திரைப்படங்கள் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படத்தில் அவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். ஆனால், அந்த காட்சி திரைப்படத்தில் இடம் பெறவில்லை.

இந்நிலையில் இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் கைகளை தூக்கி தூக்கியபடி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதோ அவருடைய அந்த புகைப்படம்…
