மீண்டும் கைகோர்க்கும் வெற்றி கூட்டணி.. சென்சேஷன் பட இயக்குனருடன் இணையும் நடிகர் கார்த்தி..

தமிழில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பில் ரசிகர் மனதில் நீங்க இடம் பிடித்தவர் கார்த்தி. தமிழ் நடிகர் சிவகுமாரின் மகன் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் தம்பி ஆவார். பருத்திவீரன் படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா, கோ, சகுனி, மெட்ராஸ் போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு உதவி புரிந்து வருகிறார் நடிகர் கார்த்தி. தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கார்த்தி. இவர் தற்போது ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் இயக்கத்தில் சுல்தான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகின் சென்சேஷன் நடிகையான ராஷ்மிகா மந்தன்னா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில், சுல்தான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கார்த்தி அடுத்து முத்தையா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் கொம்பன் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வசூல் செய்து படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.