பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.குறிப்பாக மற்ற நிகழ்ச்சிகளை விட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகவும் பெரிய வரவேற்பு உள்ளது.
முந்தைய சீசன்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் இந்த சீசன் சற்றே மக்களின் பொழுதை போக்கும் வகையில் சென்றுகொண்டிருக்கிறது.

93 நாட்களை கடந்த நிலையில், இறுதியில் இன்னும் 7 போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர். இதனையடுத்து, யார் யார் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற போகிறார்கள் என ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் ஒரு வித அச்சத்திலேயே உள்ளார்கள்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் இதுவரை எலிமினேட் செய்ய பட்டு வெளியே சென்ற போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் அந்த போட்டியாளர்கள் அனைவரும் ஒரு வாரம் பிக்பாஸ் வீட்டில் தங்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், மீண்டும் வரும் போட்டியாளர்களில் அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல மாட்டார் என தெரிகிறது. இதற்கு அனிதா சம்பத் தந்தையின் கூட காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதனால் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கவிருக்கும் சுவாரஸ்யத்தை காண்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.