முதலில் சந்திரமுகி படத்தில் ஜோதிகா வேடத்தில் நடிக்க இருந்தது எந்த நடிகை தெரியுமா? வெளியான தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, வடிவேலு, நாசர் என திரையுலக பட்டாளமே இணைத்து நடித்து மிக பெரிய வெற்றி கண்ட படம் சந்திரமுகி. 2005ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன் ராம்குமார் கணேசன் தயாரித்து பி.வாசு எழுதி இயக்கிய நகைச்சுவை திகில் படம் சந்திரமுகி. இப்படம் பி.வாசுவிற்கு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படமாகும். சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு மணலை மருத்துவராக நடித்திருப்பார்.

இதில் படத்தில் மிகவும் முக்கியமான சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஜோதிகா. இப்படத்தில் ஜோதிகாவின் இன்றளவும் மக்களிடத்தில் நீங்க இடம் பிடித்துள்ளது. நடிகை ஜோதிகா வாலி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆம் ஜோதிகா நடித்திருந்த இந்த சந்திரமுகி கதாபாத்திரம் தான் படத்தின் இமாலய வெற்றி முக்கியமான காரணமாக இருந்தது.

இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது நடிகை ஜோதிகா கிடையாதாம். ஆம் முதன் முதலில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் தான் நடிக்க ஒப்புக் கொண்டாறாம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தில் நடிகை சிம்ரன் நடிக்க வில்லையாம்.