‘ராஜா ராணி’ சீரியல் நடிகர் சித்துவின் வருங்கால மனைவி யாரு தெரியுமா..? அவங்களும் ஒரு சீரியல் நடிகை தான்..! புகைப்படம் இதோ..

தற்போது திரைப்பட நடிகர் நடிகைகளையும் விட இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருவது தற்போது வழக்கமான ஒன்றாக இருக்கும். முன்பெல்லாம் இல்லதரசிகம் மட்டும் சீரியல் பார்த்து வந்தார்கள் ஆனால் தற்போது அப்படியெல்லாம் இல்லை வழக்கமே வேற என்றுதான் சொல்ல வேண்டும், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் தொடர்களையும் சிறுசுகளும், பெருசுகளும், இளசுகளும் என பலரும் தற்போது சின்னத்திரை சீரியல்களையும், சின்னத்திரை நிகழ்சிகளையும் பார்த்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. ராஜா ராணி என்ற சீரியலில் முதலில் ஜோடியாக நடித்தது சஞ்சீவ்-ஆல்யா மானசா. சீரியல் மூலம் இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு காதலர்கள் ஆனார்கள். பின் திருமணமும் செய்தார்கள், இப்போது அவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது. ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசா, சித்து என்ற நடிகருடன் இணைந்து நடித்து வருகிறார்.

சித்து இதற்கு முன் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியல் மூலம் பிரபலமானார். ஸ்ரேயா என்பவருடன் சித்து இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. சித்து-ஸ்ரேயா விரைவில் திருமணமும் செய்ய உள்ளார்கள். காதலே காதலே என்ற காதலர் தின நிகழ்ச்சியிலும் அவர்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளார்கள்.