விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம் ! யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே..

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு ஆண்டு இளம் நடிகர்கள் பலரும் அறிமுகமாகி வருகின்றனர். இப்படி அறிமுகமாகும் அனைவரத்து திரியாபப்டங்களும் வெற்றி பெற்று பெரும் புகழும் அவர்களுக்கு கிடைப்பதில்லை ஆனால் சிலருக்கு வெற்றியடைந்தால் கூட அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருவதில்லை. இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக பல இளம் நடிகர்களும் கலக்கி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

உச்ச நட்சத்திரங்களுடனே போட்டிபோடும் அளவுக்கு அவர்களது திரைப்படங்களும் வசூலை குவித்து வருகிறது.இப்படி தொலைக்காட்சிகளிலும், குறும்படங்களிலும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பின்னர் தனது திறமையினால் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத கதாநாயகனாக தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இப்படி ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் முதன் முதலாக தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் முன்னணி கதாபாத்திரங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரியாபப்டதிர்க்கு ஓரளவு பிரபலமாகவே அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடித்தார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தில் கமலுடன் முதல்முறையாக விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் மூவரும் இடம்பெற்றுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் காரைக்குடியில் நடக்கவுள்ள படப்பிடிப்பில் ஷிவானி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.