நடிகர் இனிகோ பிரபாகர், ஆரம்பத்தில் சின்ன, சின்ன ரோல் களில் நடித்து பிறகு துணை நடிகர் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகர் இனிகோ. அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான “சென்னை 28 ” படத்தில் ஜான் என்னும் ரோலில் நடித்தார். அதற்க்கு பிறகு சுந்தரபாண்டியன், சரோஜா, அழகர்சமியின் குதிரை, பிச்சுவா கத்தி, ரம்மி என பல படங்களிலும் நடித்தார்.

விஜய் சேதுபதியோடு சேர்ந்து இவர் நடித்த “சுந்தரபாண்டியன்” படம் இவருக்கு ஒரு அடையாளத்தைப் பெற்றுத்தந்தது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமீபத்தில் கூட பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சர்வைவர்” நிகழ்ச்சியில் பங்கு கொண்டார் இனிகோ பிரபாகரன். இவர் சென்னை 28 படத்தின் மூலம் தான் கவனத்திற்கு உள்ளானார். ஆனால் அதற்கும் முன்பே தல, தளபதியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

அந்த வகையில் “புதிய கீதை” படத்தில் நடிகர் விஜயின் நண்பனாகவும், நடிகர் அஜித்குமார் நடித்த “ஜி” படத்தில் அவரின் நண்பனாகவும் நடித்தார். இப்போது தல அஜித்துடன் “ஜி” படத்தில் நடித்த காட்சியில் நடிகர் இனிகோ பிரபாகரன் வருவது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ அந்த வீடியோ…