வித்யாசமான உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை அபர்ணா..! “நேச்சுரல் ப்யூட்டி..” என்று வர்ணிக்கும் நெட்டிசன்கள்..

நடிகர் சூர்யா நடிப்பில் OTT -யில் வெளியான `சூரரைப் போற்று’ படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை அபர்ணா பாலமுரளி. “பொம்மி” என்ற கேரக்டராகவே வாழ்ந்துகாட்டிய நடிப்புக்கு மட்டுமன்றி, மதுரை ஸ்லாங்கில் சொந்தக் குரலில் பேசியதற்கும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. மலையாள திரையுலகில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இதன்பின் “8 தோட்டாக்கள்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் கநாயகியாக காலடி பதித்தார்.

இதனை தொடர்ந்து “சர்வம் தாளமயம்” எனும் படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இவையெல்லாம் விட, நடிகர் சூர்யாவுடன் “சூரரை போற்று” படத்தில் நடித்திருந்த பொம்மி கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது. இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது நடிகை அபர்ணா தனது சமூகவலைத்தள பக்கத்தில் வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

அதில், ஒரு காலில் லெக்கின்ஸும் மறு காலில் புடவையை சுற்றி அல்ட்ரா மார்டன் உடையில் போ ட்டோஷூ ட் நடத்தி உள்ளார் நடிகை அபர்ணா. இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்…