சீனாவைச் சேர்ந்த ஒரு நபர் ஒருவர், தனது நாய்க்கு பிரத்யேக பயிற்சி கொடுத்துள்ளார். அதாவது, தன் மகள் வீட்டுப் பாடங்களை சரியாக செய்கிறாரா என்பதைப் பார்க்க அவர் நாய்க்கு பயிற்சி கொடுத்துள்ளார்.
இது குறித்த ஒரு வீடியோ, தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பயிற்சி கொடுக்கப்பட்ட அந்த நாயின் பெயர் ஃபான்டுவான். ஒவ்வொருமுறை வீட்டில் இருக்கும் அந்தச் சின்னப் பெண், வீட்டுப் பாடம் செய்யும்போதும், ஃபான்டுவான், மேசை மீது கைகளை வைத்து நிற்கிறது. அந்த சுட்டிப் பெண் வீட்டுப் பாடங்களை முடிக்கும் வரை அங்கேயே நிற்கிறது.
Chinese dad trains dog to make sure daughter does homework!#China pic.twitter.com/fGTrjlkkh0
— Press TV (@PressTV) May 11, 2019