15 மாணவர்கள்,தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களால் 7 மாதமாக சீரழிக்கப்பட்ட 9-ஆம் வகுப்பு மாணவி

14 வயது பள்ளி மாணவியை 7 மாதங்களாக சக மாணவர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் இரு ஆசிரியர்களால் மாறி மாறி சீரழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், சாரன் பகுதியிலுள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும்
மாணவி ஒருவரை சக மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனை கைபேசியில் படம் எடுத்த அவர்கள்,விடியோவை வைத்து அந்த மாணவியை மிரட்டியுள்ளனர்.

மாணவியின் தந்தை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வீட்டின் சூழல் காரணமாக இக்கொடுமையை தன் குடும்பத்தாரிடம் கூட அந்த மனைவியால் சொல்லமுடியவில்லை.

இந்நிலையில், விடியோவை காட்டி மேலும் சில மாணவர்களும், அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.இதனால் வேறு வழியின்றி தனது பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி மாணவி அழுதுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த ஆசிரியர் குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து விடியோவை சோதனை செய்துள்ளார்.பின் அந்த ஆசிரியரும் அந்த பெண்ணிடம் அத்துமீறியுள்ளார் மேலும் தனக்கு நெருக்கமான தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியரிகளுக்கு அந்த பெண்ணை விருந்தளித்துள்ளார்.

இதுபோல கடந்த 7 மாதங்களாக அந்த மாணவியை இந்த கொடூர மிருகங்களால் சீரழிக்கப்பட்டுள்ளார்.சிறையிலிருந்து வெளியே வந்த தந்தையிடம் கூறி போலீசாரை நாடினர்.

இந்த சம்பவம் தொடர்பாக ,பள்ளியின் தலைமை ஆசிரியர்,2 ஆசிரியர்கள் மற்றும் 15 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் கடந்தாண்டு மட்டும்  2000-க்கும் அதிகமான பள்ளி மாணவிகள் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.