நாம் அன்றாடம் பல விஷியன்கள் கேள்விப்படுகின்றோம், அது ஒரு செய்தியாக கடந்து செல்கின்றது. அனால் ஒரு சில சம்பவங்கள் தான் நாமல் மறக்க முடியாத வகையில் உள்ளது. அப்படி ஒரு மறக்கமுடியாத சம்பவம் ஒன்று தற்போது அரங்கேறியுள்ளது. அஃது. நாமக்கல் மாவட்டத்தில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் பள்ளில் 2ம் வகுப்பு படித்த மாணவரை மனித கழிவை அள்ள வைத்ததாக கடந்த 2015ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூர் காலனியை சேர்ந்த வீராசாமி மகன் சசிதரன். அப்போது அங்குள்ள நகராட்சி பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மாலை 3 மணியளவில் சக மாணவர் ஒருவர் வகுப்பறையில் மலம் கழித்துள்ளார். அதனை வகுப்பு ஆசிரியர் சசிதரனை மிரட்டி அள்ள வைத்துள்ளார்.

வெறும் கைகளால் அள்ளியதை மாணவன் பெற்றோர்களிடம் கூறியுள்ளதையடுத்து,பெற்றோர் கொடுத்த புகாரையடுத்துதற்போது நீதிமன்றத்தில் உத்தரவு வழங்கப்பட்டது. தீர்ப்பில் சம்பந்தப்பட்ட ஆசிரிருக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.10000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கின் இறுதி தீர்ப்பை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.