2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறிவைத்திருக்கின்றது? சிம்ம ராசிக்காரர்களிடம் யாரும் நெருங்க வேண்டாம்!

2018 ஆம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ய போகிறோம். ஆனால் இது எத்தனை பேருக்கு வெற்றிகரமாக இருந்தது என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். சிலருக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருந்திருக்கும், சிலருக்கு இந்த ஆண்டு மோசமான ஆண்டாக இருந்திருக்கும். அது அவரவர் உழைப்பையும், நேரத்தையும் பொறுத்தது. இவற்றுடன் பொறுத்து உங்கள் ராசியும் முக்கியப்பங்கு வகிக்கும். அடுத்த ஆண்டு எப்படி இருக்க போகிறது என்பதற்கான ஆவலும், பதட்டமும் உங்களுக்கு இருக்கும். அதற்கான விடையுடன் நாங்கள் இங்கு வந்துள்ளோம். இந்த பதிவில் 2019 ஆம் ஆண்டு எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாக இருக்கப்போகிறது, எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் குறைவான ஆண்டாக இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.

விருச்சிகம்
மிகவும் மர்மமான ரகசிய குணங்களை கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் எங்கு சென்றாலும் அங்கிருக்கும் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்கள். ஆனால் அதிர்ஷ்டம் என்று வரும்போது அவர்களுக்கு அது குறைவுதான். ஆனால் 2019 ஆம் ஆண்டு அவர்களுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக இருக்கப்போகிறது. அவர்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் ஆண்டாக இது இருக்கும்.

தனுசு
தனுசு ராசி வியாழன் கிரகத்தால் ஆளப்படும் ராசியாகும், வியாழன் கிரகமானது இயற்கையாகவே தன்னுள் அதிர்ஷ்டத்தை கொண்டது. ஏனெனில் அதில் இருக்கும் வெள்ளி கோடுகள் வெற்றியை அவற்றை நோக்கி இழுத்து வரும். ஆனால் இந்த ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டம் குறைவாகத்தான் இருக்கும், ஆனால் உங்களுடைய எண்ணம் தெளிவாக இருந்தால் எந்தவித சிரமமான சூழ்நிலையையும் சமாளிக்கலாம்.

சிம்மம்
ஆற்றலும், ஆர்வமும் நிறைந்த சிங்கத்தை கொண்டு குறிப்பிடப்படும் ராசி சிம்மம். மற்ற ராசிகளை விட சிம்ம ராசிக்காரர்கள் அனைவராலும் விரும்பப்படுவபவர்களாக இருப்பார்கள். உங்களின் வசீகரம் அனைவரையும் உங்களை நோக்கி ஈர்க்கும். உங்கள் வசீகரத்தை குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள் இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றிதான். சிம்ம ராசியிடம் யாரும் போட்டியிட நினைக்க வேண்டாம்.

கும்பம்
சுதந்திரத்தை விரும்பும் கற்பனைத்திறன் மிகுந்தவர்கள் கும்பராசிக்காரர்கள். அவர்கள் மாற்றங்களை விரும்பாதவர்களாக இல்லாவிட்டாலும் அவர்களை சுற்றி எப்பொழுதும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி அதனை அவர்களால் தவிர்க்க இயலாது. 2019 அவர்களுக்கு ஏற்ற, இறக்கங்கள் கலந்த ஆண்டாக இருக்கும். அவர்களின் நெகிழ்வுத்தன்மை அவர்களுக்கு அனைத்து மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள உதவும்.

மகரம்
அதிர்ஷ்டத்தை விரும்பாமல் உழைப்பை நம்பி தனக்கான வெற்றியையும், வாய்ப்பையும் அவர்களே உருவாக்குபவர்கள். அவர்களின் வெற்றியை உருவாக்க அவர்களுக்கு சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம் ஆனால் இறுதியில் நிச்சயம் ஜெயித்துவிடுவார்கள். இது அதிர்ஷ்டமாக உங்களுக்கு தெரிந்தால் அது அவர்களின் வெற்றிக்கான தாகம் ஆகும். அவர்களின் வாழ்க்கையை அவர்களே செதுக்கிக்கொள்வார்கள்.

ரிஷபம்
இரண்டாவது ராசியான இது, அவர்கள் நேர்மையானவராகவும், மற்றவர்களுடன் உணர்ச்சிரீதியாக பிணைப்பில் இருப்பார்கள். இவர்களுக்கு சிலசமயம் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். அவர்கள் தங்கள் பொருள் மீதும் தங்களுக்கு பிடித்தவர்கள் மீதும் அதிக பொறாமையுடன் இருப்பார்கள். இவர்கள் புத்திகூர்மை இவர்களுக்கு ஓரளவு அதிர்ஷ்டத்தை கொண்டுவரும்.

மீனம்
இரட்டை மீன்களால் குறிப்பிடபடும் மீன ராசியானது அவர்கள் தங்களுக்கான இடத்தை தானே உருவாக்கி தனக்கான இடத்தில தனிமையில் வசிக்க விரும்புவார்கள். அவர்கள் தனக்கான அமைதியை தனக்குள்ளே தேடுபவர்கள். அவர்களின் கருணை மற்றவர்களிடம் வெளிப்படையாக பழக தூண்டும். அவர்களின் உறவுகளும், தொடர்புகளும் அவர்களுக்கு தேவையான வெற்றியை உண்டாக்கும்.

துலாம்
நியாயத் தராசை சின்னமாக கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அவ்வளவாக கைகொடுக்காது. அவர்களின் விழிப்புணர்வு அவர்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ள உதவும். ஆனால் 2019 ஆம் ஆண்டு அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவரும். அவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை நடக்கும் அனைத்தையும் நம்பவேண்டியது.

மேஷம்
ராசிபலன்களில் முதல் ராசியாக இருக்கும் இது அதிர்ஷ்டத்திலும் முதல் ராசியாக இருக்கிறது. இவர்களின் வைராக்கியம் இவர்களின் மிகச்சிறந்த குணங்களாகும். அவர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை கட்டுப்படுத்த தெரிந்து கொண்டால், அவர்கள் சிறப்பான செயல்களை தங்கள் வாழ்க்கையில் செய்யக்கூடியவர்கள்.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களின் மிகசிறந்த குணம் அவர்களின் புத்திசாலித்தனமாகும், அவர்களிடம் பேசும் அனைவரும் அவர்களின் புத்திகூர்மையால் ஈர்க்கக்கூடியவர்கள். வரப்போகிற ஆண்டில் அவர்களின் புத்திசாலித்தனம் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பணிசார்ந்த வாழ்க்கை இரண்டிலுமே வெற்றியை காண்பார்கள்.

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் கருணையும், கவனமும் நிறைந்தவர்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் 2019 ல் உங்களுக்கு அப்படி இருக்காது, உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வைத்து நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும்.

கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்பதை காட்டிலும் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதே உண்மை. அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் அத்தனை வெற்றிகளும் தங்கள் உழைப்பால்தான் கிடைக்கிறது என்று நம்பக்கூடியவர்கள். அவர்கள் அனைத்திலும் லாஜிக்காக யோசித்து செயல்படக்கூடியவர்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் 2019 அவர்களுக்கு ராசியான ஆண்டாக அமையும்.