இந்த பூமியில் பிறந்த எந்த உயிரினமும் காதல் இன்றி வாழ்வது சாத்தியம் இல்லை. காதல் என்ற ஒற்றைப்புள்ளியில்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. தன் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள்.இப்படி யாரோ ஒருவரின் மீதான நேசம்தான் நம் இலக்கை நோக்கி நம்மை அனுதினமும் நகர்த்திக்கொண்டிருக்கிறது.
சுனில்- சோபியா என்ற அழகிய காதல் தம்பதிகள் பற்றிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.இதற்கு காரணம் அவர்களின் வயது வித்தியாசம் தான். 14 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தாலும் காதலால் ஒன்றிணைந்து அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வருகின்றனர் தம்பதி.
பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஏழு வயதேயான மரியம் சோபியா லட்சுமிக்கு சுனிலை பார்த்தவுடன் காதல் வந்து விட்டது.கிருஷ்ணன் வேடமணிந்து கதகளி நடனமாடிய சுனிலின் கண்கள் லட்சுமியை சுண்டி இழுத்தன, அவருக்கு வயது 21, இச்சம்பவம் நடந்தது 1988ம் ஆண்டு.
ஏற்கனவே இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டால் ஈர்க்கப்பட்ட லட்சுமியின் பெற்றோர் மகன், மகளுக்கு லட்சுமி, நாராயண் என பெயர் சூட்டியிருந்தனர்.
தொடர்ந்து சுனிலும் குடும்ப நண்பராக மாறினார். வருடங்கள் செல்ல செல்ல, தனது 15வது வயதில் பரதநாட்டியம் கற்றுக்கொள்வதற்காக லட்சுமி இந்தியா வந்துள்ளார்.
இருவரும் பேசிப்பழக காதல் மலர்ந்துள்ளது, அன்றைய நிகழ்வுகள் இன்று நினைத்தாலும் பூரிப்பாக உள்ளது என நெகிழ்கிறார்கள் இருவரும்.இவர்களது திருமணத்துக்கு லட்சுமி வீட்டில் பச்சைக்கொடி காட்டினாலும், சுனிலின் உறவினர்கள் எதிர்த்துள்ளனர்.
வெளிநாட்டவரின் கலாச்சாரம் வேறு, உங்களது திருமண பந்தம் எந்தளவு வரை நீடிக்கும் என தெரியவில்லை என காரணங்களை கூறினாலும் சுனிலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பரதநாட்டியத்தின் மீதும், நம் பண்பாட்டின் மீதும் லட்சுமி கொண்ட ஆர்வம் இவர்களது காதலை அதிகப்படுத்தியதே தவிர எள்ளவும் குறையவில்லை.
தொடர்ந்து இருவரும் மணமுடித்துக் கொண்டு காதல் வாழ்க்கையை ரசித்து வாழ்கின்றார்களாம். இருவரும் இணைந்தே பல மேடை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள், லட்சுமி இதுவரையிலும் எட்டு கேரள படங்களிலும் நடித்துள்ளாராம்.