21 வருடங்களுக்கு முன்பு…. ரோலக்ஸ், ஏஜென்ட் டினா…. இணையத்தை தெறிக்க விடும் வைரல் புகைப்படம்….!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து வரலாறு காணாத வகையில் வசூல் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் வசூல் சாதனையில் முதலிடத்தில் இருந்த பாகுபலி திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி விக்ரம் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் இடம்பெற்று இருந்த கதாபாத்திரங்கள் தான். படத்தின் இறுதி நிமிடங்களில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து களம் இறங்கி ஒட்டுமொத்த படத்தையும் வேற லெவலுக்கு கொண்டு சென்றார். அதுமட்டுமல்லாமல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் நடன கலைஞர் வசந்தி அசத்தியிருப்பார்.

இவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடனமாடியுள்ளார். தற்போது பிரெண்ட்ஸ் திரைப்படத்தின் வசந்தி, நடிகர்கள் சூர்யா மற்றும் விஜயுடன் நடனமாடியுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை 21 வருடங்களுக்கு முன்பு ரோலக்ஸ் மட்டும் ஏஜென்ட் டினா என இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.