சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த. தீபாவளி பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிக பெரியளவில் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

மேலும் அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டே நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பெரியாத்தா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை இப்படத்திற்கு முன்பே ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படத்தில் அவர் ஒரு சின்ன காட்சியில் மட்டும் வந்திருப்பார். மேலும் இதனை அண்ணாத்த திரைப்படத்தின் ஷூ ட்டிங்கின் போது ரஜினியிடம் அவர் கூறியதாகவும், பின் ரஜினி அவரின் கதாபாத்திரத்தை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இதோ நீங்களே பாருங்க…
