தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தை வெகுவாக கவர்ந்த நடிகர் நெப்போலியன். இவர் அந்த காலகட்டத்தில் நடிப்பில் கொடிகட்டி பறந்தவர். பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வரை வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தாலும் ஒரு சில படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

அவரின் மூத்த மகன் தனுசுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார். சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொண்ட நெப்போலியன் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து சினிமாவில் கலக்கி வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகனான தனுஷ் நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்காவில் அவருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டு வருகிறது.

அவருக்காக தான் மொத்த குடும்பமும் அமெரிக்காவில் செட்டிலாகி உள்ளன. இந்நிலையில் நெப்போலியன் தனது திருமண நாளை அமெரிக்காவில் மிக எளிமையாக கொண்டாடி உள்ளார். அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நெப்போலியன்,அன்பு நண்பர்களே தமிழ் சொந்தங்களே கடந்த வாரம் எங்களது 29ஆவது திருமண நாளை எங்கள் வீட்டிலேயே நண்பர்களோடு எளிமையாக கொண்டாடினோம் என்று அதில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
