ஒரு காலகட்டத்தில் மலையாள திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவரான சார்மிளா தற்போது பட வாய்ப்புகள் ஏதுமின்றி தமிழகத்தில் வடகை குடியிருப்பு ஒன்றில் மகனுடன் வசித்து வருகிறார். சமீபத்தில் பெண்களுக்கான மாத இதழ் ஒன்றில் பேட்டியளித்த நடிகை சார்மிளா, தமிழகத்தில் ஓலைக் குடிசை ஒன்றில் தரையில் பாய் விரித்து தினமும் படுப்பதாக தமது ஏழ்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளார். வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டத்தில் ஏற்பட்ட 3 காதலும், அவை தமது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கமுமே தமது தற்போதைய நிலைக்கு காரணம் என கூறும் சார்மிளா,
தமது கணவர் ராஜேஷுடனான விவாகரத்துக்கு பின்னர் தற்போது 9 வயதாகும் மகனுடன் புதிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். நோய்வாய்ப்பட்ட தமது தாயாரும் தம்முடன் இருப்பதாக தெரிவித்துள்ள நடிகை சார்மிளா, ராஜேஷுடனான விவாகரத்துக்கு பின்னர் தமக்கு என்ன செய்யப் போகிறோம் என தெரியாமல் இருந்தது எனவும், வாடகை ஒரு வீடு தேடி அலைந்து பின்னர் தற்போதுள்ள குடியிருப்புக்கு வந்து சேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்போதேனும் திரைப்பட வாய்ப்பு அமைவதாக கூறும் சார்மிளா, மாதம் ஒரு பத்து நாட்கள் வாய்ப்புகள் அமைந்தாலே போதும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தமது மகன் ஜூட் அடோனிஸ் இப்படி வாடகை குடியிருப்பில் வாழவேண்டியவர் அல்ல. வாழ்க்கையை நான் எதிர்கொண்ட விதமே தமது மகனின் தற்போதைய நிலைக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்போதேனும் தமது முன்னாள் கணவர் வாங்கித்தரும் பீட்சா மட்டுமே தனது மகனுக்கு கிடைக்கும் ஒரே ஒரு மகிழ்ச்சியான விடயம் என கூறும் சார்மிளா, நடிகர் விஷாலின் கருணை மனப்பான்மை காரணமாக அவனது கல்விக்கு இதுவரை பிரச்னை ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.