பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 ஆம் சீசன் பல விமர்சனங்களை எதிர்கொண்டு தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, ஆனால் முதல் சீசனை போல் சுவாரசியம் இல்லை, கமல் வரும் இரண்டு நாட்கள் மட்டுமே மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும் என்பது பலரது கருத்தாக உள்ளது.
இந்நிலையில் கண்டனத்தை ஞாயிறு நிகழ்ச்சியின் முடிவில். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாக வந்த, குழந்தைகள் குறித்து கமல் கேள்வி எழுப்பினார்.இதற்கு அனைவரும் சொல்ல வார்த்தைகளே இல்லை என அந்த குழந்தைகள் குறித்து மிகவும் பெருமையாக பேசினார்கள்.
இந்நிலையில், கமல் இது குறித்து பேசும் போது தானாக கையை உயர்த்திய சென்ராயன். சார் எனக்கு கல்யாணம் ஆகி 4 ஆண்டுகள் ஆச்சு இன்னும் குழந்தை இல்லை நீங்க அனுமதி குடுத்தா ஒரு குழந்தையை தத்து எடுத்து கொள்கிறேன் என்று கூறினார்.
இவரின் இந்த வார்த்தையில் நெகிழ்ச்சியடைந்த கமல்… என் தம்பி சென்றாயன் எனகூறிவிட்டு, பின் சென்ராயனிடம் இதை மட்டும் செய்யுங்கள், அடுத்த வருடமே உங்கள் மனைவி கர்ப்பமாக ஆவார் என கமல் கூறினார்.
இந்நிலையில், கமல் கூறிய அந்த வார்த்தை பலித்தாற் போல், தற்போது சென்ராயன் மனைவி உண்மையாகவே தான் கர்ப்பமாக உள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.இது குறித்து அவர் தொடர்ந்து கூறியதாவது,
சென்ட்ராயன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு தான் மருத்துவர் இதை உறுதி செய்ததாகவும். பல நாள் ஏங்கிய இந்த சந்தோஷமான செய்தியை என் கணவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும்போது சொல்வேன் எனக் கூறியுள்ளார்.மேலும் அவர் பேசிய முழு வீடியோ இதோ