சோனி லைவ் ஓடிடி தளத்தின் புதிய வெப் தொடர் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இயக்குனர்கள் பா ரஞ்சித், சிம்பு தேவன்,வெங்கட் பிரபு மற்றும் எம் ராஜேஷ் என 4 இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ள விக்டிம் ஆண்டாலஜி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் நாசர், தம்பி ராமையா, நட்டி நடராஜ், பிரியா பவானி சங்கர், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சாம் சி எஸ், பிரேம்ஜி, கணேஷ் சேகர், தென்மா என 4 இசையமைப்பாளர்கள் இந்த வெப் தொடருக்கு இசையமைத்துள்ளார்கள். சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ’விக்டிம்’ வெப் தொடர் வெளியாக உள்ளது.