40 வயதை கடந்தும் சிங்கிளாகவே வாழ்ந்து வரும் நடிகர், நடிகைகள்… இது தான் உண்மை காரணமாம்

25 வயதை தாண்டினாலே என்னம்மா இன்னுமா கல்யாணம் பண்ணல என்று பெண்களை பார்த்து கேள்விக் கேட்க ஆர்மபித்துவிடுவார். இதுவே ஆண்களுக்கு என்றால் 29, 30 வரை இந்த சமூகம் வயதை நீடித்துக் கொள்ளும். 30 வயதை தாண்டியும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றால் ஏதாவது தோஷமா, கோளாறு என்று அவர்களே கதைக்கட்ட ஆரம்பித்துவிடுவார். சாமானிய மக்களுக்கே இத்தனை பிரச்சனை என்றால், ஒரு பிரபலமாக இருந்துக் கொண்டு கல்யாணத்தை தட்டிக் கழித்து கொண்டே வந்தால் எத்தனை கேள்விகள், மனவுளைச்சல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அப்படி பார்த்தால்…  இன்றைய காலக்கட்டத்தில் இந்திய சினிமாவில் அதிக மனவுளைச்சல் கொண்டிருக்கும் நடிகர், நடிகைகள் இவர்களாக தான் இருக்க வேண்டும். ஆம்! நாற்பதுகளை சுற்றி இன்றும் சிங்கிளாக வாழ்ந்து வரும் நடிகர் நடிகர்கள் பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்..

விஷால் 41
ஆரம்பத்தில் இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர். செல்லமே திரைப்படத்தில் நடிகராக வாய்ப்பு கிடைத்து அப்படியே ஆக்ஷன் ஹீரோ அவதாரம் ஏற்றுக் கொண்டார். நடுவே நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் பொறுப்புகள் சேர. பின் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சபதம் ஏற்றார். இடையே இவர் லட்சுமி மேனனை காதலிக்கிறார், சரத்குமார் மகள் வர லட்சுமியை காதலிக்கிறார் என்று தகவல், கிசுகிசுக்கள் வெளியானாலும். 40தை கடந்தும் விஷால் இன்னமும் சிங்கிளாக தான் இருக்கிறார்.

ஆர்யா 38
விஷாலின் நெருங்கிய தோழரான ஆர்யா நண்பன் விஷால் திருமணம் செய்துக் கொண்ட பிறகு தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சபதம் ஏற்றிருக்கிறாரா என்பதெல்லாம் அவருக்கு மட்டும் தான் தெரியும். நடுவே சின்னத்திரையில் பெண் பார்க்கும் படலத்தை துவக்கி.., அதிலும் கிரேட் எஸ்கேப்பாகி விட்டார் இந்த ட்விட்டர் டார்லிங்.

சிம்பு 35
சிம்புவின் முதல் காதல் ஒரு புரியாத புதிர். அது மன்மதன் ஐஸூ என்று மட்டும் தெரியும். ஆனால் அந்த ரியல் ஐஸூ யார் என்பதில் நிறைய கிசுகிசுக்கள் நிறைந்துள்ளன. பிறகு நயன்தாராவை காதலித்து பிரிந்த சிம்பு… கொஞ்ச காலம் கழித்து ஹன்ஷிகாவை காதலித்தார். அந்த காதலும் குறுகிய காலத்தில் ப்ரேக்-அப் ஆனது. தொடர் காதல் தோல்விக்கு பிறகு ஆன்மீக பயணத்தை மேற்கொண்ட சிம்பு எப்போது சிங்கிள் துறவி வாழ்க்கையை கைவிட்டு திருமண பந்தத்தில் இணைவார் என்பது டி.ஆர்க்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

கௌசல்யா 38
கௌசல்யா 1990களில் நடிக்க வந்தவர். இவர் நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. வெள்ளித்திரையைத் தொடர்ந்து சின்னத் திரையிலும் முகம் காட்டினார். பிறகு, மீண்டும் வெள்ளித்திரையில் அக்கா வேடங்கள் ஏற்று நடித்தார். 38 வயதான கௌசல்யா இப்போது வரையிலும் சிங்கிளாக தான் இருக்கிறார்.

சுஷ்மிதா சென் 43
சுஷ்மிதா சென் ஆரம்பம் முதலே தான் சிங்கிளாக தான் இருக்க போகிறேன் என்று கூறியவர். அதை போலவே இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து தனி ஆளாக அவர்களை வளர்த்து வருகிறார். ஆனால், சமீபத்தில் இவருக்கும் ஒரு ஆண் மாடலுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும். இருவரும் வருமாண்டு (2019) இறுதியில் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இருப்பினும் இன்று வரை சுஷ்மிதா சென் சிங்கிள் தான்.

தபு 47
தபு ஒரு நடிப்பு சூறாவளி. கதையின் நாயகியாக இருந்த போதிலும் சரி, குணச்சித்திர வேதங்கள், துணை வேதங்கள் ஏற்ற போதிலும் சரி தபு துளியளவு கூட தன் நடிப்பில் காம்ப்ரமைஸ் செய்துக் கொண்டதில்லை. அதற்கு அவரது சமீபத்திய வெளியீடான அந்ததுன் சாட்சி.