தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீனாவுக்கு ஆறுதல் கூறி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர தோழிகள் பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். அவ்வகையில் ரம்பா, கலா மாஸ்டர் மற்றும் மீனா மூவரும் நேரில் சந்தித்தது மட்டுமின்றி மீனாவை கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர்.

கணவர் இருந்து கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு பின்பு மீனாவை வெளியே அழைத்து வந்து அவரது தோழிகள் அவரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள்.கடற்கரையில் மூவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.