17 வயது சிறுவன் தனது வயதை மாற்றி கூறி 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தலைமறைவாகியுள்ள அந்த சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வங்கதேசத்தை சேர்ந்தவர் ரஷித் என்பவரின் மகன் ராணா (17). இவர் தனக்கு 21 வயதாகிவிட்டது என பொய்யாகி பிறப்பு சான்றிதழை தயார் செய்து கடந்தாண்டு ஜனவரியில் ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.ஆனால் ராணாவுக்கு 17 வயது தான் ஆகிறது என்பதை கண்டுபிடித்த மனைவி அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
அப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகும் அந்த சிறுவன் அவனுடைய வேலையில் சரியாய் இருந்துள்ளான்.இதே பொய்யை கூறி ராணா இதுவரை ஐந்து பெண்களை திருமணம் செய்துள்ளார். கடைசியாக கடந்த 20ம் தேதி மவுசுமணி என்ற பள்ளி மாணவியை ராணா மணந்தார்.இவன் பள்ளி மாணவி என்றும் பாராமல் அவனுடைய அந்த விளையாட்டை கட்டியுள்ளான்.வுசுமணியை தவிர மற்ற நால்வரும் ராணாவை விவாகரத்து செய்துவிட்டனர்
.
ம ராணாவின் மோசடி செயல் குறித்து பொலிசுக்கு தெரியவந்துள்ள நிலையில் அவரின் தந்தை ரஷித் கைது செய்யப்பட்டுள்ளார்.இவை அனைத்திற்கும் அவனின் தந்தை உடந்தையாக இருந்து இருக்கிறான்.போலீசார் அவனுடைய தந்தையை கைது செய்துள்ளனர்.சம்பவம் தெரிந்த ராணா தப்பிவிட்டான்.
ராணா தலைமறைவாகியுள்ளதால் பொலிசார் அவரை தேடி வருகிறார்கள்.ஊர் தலைவருக்கு பணம் கொடுத்து பொய்யாக பிறப்பு சான்றிதழை ராணா வாங்கியுள்ளது தெரியவந்துள்ள நிலையில் இது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.விசாரணையில் மேலும் அவனுக்கு உதவிய பல அதிகாரிகளும் சிக்கக்கூடும் என்று எதிர்பார்க்க படுகிறது.