பிஞ்சிலேயே பழுத்து டாப் நடிகைகளுக்கு….. டப் கொடுக்கும் 5 நடிகைகள்…. இந்த வயசிலேயே இப்படியா?….!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக இருந்த பலரும் தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சிலர் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து தற்போது ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போய் உள்ளனர்.ஆனால் சிலரோ இளம் வயதிலேயே டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு நடிப்பிலும் சரி கவர்ச்சியிலும் சரி முன்னணியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் சினிமாவில் தற்போது பிஞ்சிலேயே பழுத்த ஐந்து முன்னணி நடிகைகள் இருக்கின்றனர்.

அதில் முதலாவதாக நடிகை ஷிவானி நாராயணன், இவருக்கு தற்போது 21 வயது தான் ஆகிறது என்று கூறினால் கட்டாயம் யாராலும் நம்ப முடியாது. முதல் முதலில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் கிளாமரான புகைப்படங்களால் இவருக்கு 35 லட்சம் இன்ஸ்டா உள்ளனர்.

அடுத்ததாக அனிகா சுரேந்திரன் முதல் முதலில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்து அசத்தி இருந்தார். சமீபத்தில் வெளியான மாமனிதன் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு வயது 21 தான் ஆகிறது.இருந்தாலும் தனது 21 வயதிலேயே தற்போது ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இவர் அவ்வபோது தனது கிளாமரான போட்டோக்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இவருக்கு 16 லட்சம் இன்ஸ்டா பாலோவர்ஸ் உள்ளனர்.

அடுத்ததாக பிரவீனா தாஹா, இவர் குழந்தை நட்சத்திரமாக ஜில்லா, புலி மற்றும் பூஜை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் நிறைய சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ரவீனா தற்போது தனது 18 வயதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளார். இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக இவருக்கு 14 லட்சம் இன்ஸ்ட்டா பாலோயர்ஸ் உள்ளனர்.

அடுத்ததாக கேப்ரில்லா, இவர் சில படங்களிலும் சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். இவர் தற்போது விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர் மத்தியில் மேலும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இன்ஸ்டாவில் 18 லட்சம் பாலோயர்ஸ் உள்ளனர்.

அடுத்ததாக நடிகை எஸ்தர் அணில்,இவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருந்தார். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது தனது 21 வயதில் கிளாமரான போட்டோ சூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவருக்கு இன்ஸ்டாவில் 11 லட்சம் பாலோயிர் உள்ளனர்.