தமிழ் திரையுலகில் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரைதிரைப்படங்கள் வெளியாகி இந்திய வர்த்தகத்தில் பெரும் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதிலும் தமிழ் திரைப்படங்களின் தலைப்புகள் அனைத்தும் சமூக வலைத்தளம் மூலமாக ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக பிரபலமாகிறது.

அது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் தமிழ் திரையுலகம் நாளுக்கு நாள் பெரும் முன்னேற்றம் அடைந்து கொண்டே வருகிறது. அதிலும் ஒரு சில திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து லாபத்தை ஈட்டி உள்ளன.ஆனால் ஒரு சில திரைப்படங்கள் செலவு செய்த தொகையை கூட பெறாமல் படும் தோல்வியை தழுவுகிறது. அதில் மிக சொற்ப படங்களை வெற்றி பெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கின்றன.

இந்த வருடம் டாப் நடிகர்களின் பல படங்கள் திரையில் வெளியானது. அதில் ரஜினியின் படம் மட்டுமே இன்னும் வெளியாகவில்லை. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம்,விஜயின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை உள்ளிட்ட பல படங்கள் வசூல் வேட்டையை நடத்தியுள்ளன. தற்போது UAE இந்த வருடம் வெளியான படங்களில் டாப் வசூல் செய்த படத்தின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அவ்வகையில் முதல் 5 படங்கள்,
- விக்ரம்- $3.12 Million
- பீஸ்ட்- $822K
- வலிமை- $705K
- டான்- $377K
- திருச்சிற்றம்பலம்- $275K