தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்தான் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த சூழலை போற்று திரைப்படத்திற்கு அன்னையில் 5 தேசிய விருதுகள் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் அடுத்தடுத்து சில முக்கிய திரைப்படங்கள் உருவாக உள்ளன.

அவ்வகையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42வது திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. பல கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. அதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சூர்யா குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தற்போது நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் நாக அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் project k திரைப்படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் அமிதாபச்சன் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவையும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பான் இந்தியா படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
