500 காலிப்பணியிடங்கள்….. கனரா வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமான IBPS-ல் இருந்து இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு:- பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் & சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, UCO வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா.

காலி பணியிடங்கள்: மேற்கண்ட வங்கியில் மொத்தம் 6035 காலிப்பணியிடங்கள் உள்ளது. அதில் கனரா வங்கியில் மட்டும் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:  குறைந்தபட்ச வயது 20 மற்றும் அதிகபட்சம் 28 வரை.

சம்பளம்: தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: SC/ST/PWBD/EXSM விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175, மற்றும் மற்ற  அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.850.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஜூலை 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

மேலும் விவரங்களுக்கு https://ibpsonline.ibps.in/