மலையாள சினிமாவில் நடிகர் மோகன் லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிரமாண்ட வெற்றியடைந்த படம் தான் “திரிஷ்யம்”. 2013 ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு படமாக அமைத்தது திரிஷ்யம். இந்த படத்தில் நடிகர் மோகன் லால், நடிகை மீனா, எஸ்தர் அணில் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். குறிப்பாக இந்த படத்தில் நடிகர் மோகன் லால் அவர்களின் நடிப்பு அனைவரின் பாராட்டுகளையும், கைத்தட்டலைகளையும் பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த படம் திரைக்கு வந்து 6 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது இந்த இப்படத்தின் இரண்டாம் பாகம், அதாவது “திரிஷ்யம் 2” தரிப்பது OTT-யில் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இந்த பாகத்திலும் நடித்துள்ளனர். வழக்கம் போல நடிகர் மோகன் லால் நடிப்பில் கலக்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘திரிஷ்யம் 2’ எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்…