“கடலோர கவிதைகள்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் நடிகை ரேகா. இவர் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர். 80 களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ரேகா. அதுமட்டுமல்லாமல் கமல் ஹாசனுடன் “புன்னகை மன்னன்” படத்தில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரை பெற்றார். ரேகா தற்போது பல படங்களில் துணை நடிகையாக நடித்துவருகிறார். ரேகா தனது அப்பாவின் மீது அதீத பாசம் வைத்துள்ளாராம். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது “நான் எனது அப்பா மீது பாசம் வைத்துள்ளேன்,
அவர் அடங்கி இருக்கும் கீழ்பாக்கம் கல்லறையின் முன்பே என்னுடைய கல்லறை இருக்கும்.” என்று கூறியுள்ளார். அதாவது அவரது தந்தை கல்லறை பக்கத்திலேயே இவர் தனக்கும் இறப்பதற்கு முன்னரே கல்லறை அமைத்துள்ளாராம். ஏன் இப்படி செய்கிறார் என்று எல்லோரும் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் இருக்கின்றனர்.
